ஈஸ்வரியால் கோபிக்கு வந்த புது சிக்கல்.., பாக்கியா தான் எல்லாத்துக்கும் காரணம்., பாக்கியலட்சுமி அப்டேட்!!

0
ஈஸ்வரியால் கோபிக்கு வந்த புது சிக்கல்.., பாக்கியா தான் எல்லாத்துக்கும் காரணம்., பாக்கியலட்சுமி அப்டேட்!!
ஈஸ்வரியால் கோபிக்கு வந்த புது சிக்கல்.., பாக்கியா தான் எல்லாத்துக்கும் காரணம்., பாக்கியலட்சுமி அப்டேட்!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி, செல்வி, பாக்கியா எல்லோரும் காட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது இனியா தன் அசைன்மென்ட்க்கு தேவையான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி என்னால் நடக்க முடியவில்லை என்று சொல்ல பாக்கியா, அவரையும் செல்வியையும் விட்டு செல்கிறார். அப்போது ஈஸ்வரிக்கு தண்ணி தாகம் எடுக்க செல்வி பக்கத்தில் ஏதேனும் வீடு இருக்கான்னு பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். அந்த நேரம் ஈஸ்வரிக்கு ஏதோ சத்தம் கேட்க பயத்தில் நடுக்காட்டில் வழி தெரியாமல் சென்று விடுகிறார். பின் செல்வி வந்து பார்க்க ஈஸ்வரியை காணவில்லை. அப்போது பாக்கியாவும், இனியாவும் வந்து விடுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் பாக்கியா ஈஸ்வரியை தேடிச் செல்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி பாக்கியாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இனியா கோபிக்கு போன் போட்டு ஈஸ்வரி தொலைந்த விஷயத்தைச் சொல்கிறார். இதைக் கேட்ட கோபி எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான் என அவர் மீது பழியை போடுகிறார். பின் பாக்கியா எப்படியோ ஈஸ்வரியை தேடி கண்டுபிடித்து விடுகிறார். இந்த பக்கம் கோபி புலம்பிக்கொண்டே ரோட்டில் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக காரை விட்டு மோதி விடுகிறார். இதனால் அக்கம் பக்கத்தினர் கோபியை வழிமறித்து சத்தம் போடுகின்றன. பின் கோபி அவர்களை சமாளித்து அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“ஜி 20 உச்சி மாநாடு” இன்று தொடக்கம்., அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்., முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here