
“ஜி 20” அமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று (செப்டம்பர் 9) டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்க உள்ளது. இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக நேற்று (செப்டம்பர் 8) டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி நேரில் வரவேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது இரு நாடுகளும் இணைந்து ட்ரோன் கொள்முதல், போர் விமான இன்ஜின் தயாரிப்பு, நெட்வொர்க் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.