
சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ரோகிணி அம்மா மீது மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் முத்துவிடம் அவங்க பேசுற எதுவுமே சரி இல்லை. ஏதோ பொய் சொல்றாங்க என்று சொல்ல அதை ரோகிணி கேட்டு விடுகிறார். பின் முத்துவிடம் நர்ஸ் பணத்தை கட்டும்படி சொல்ல அவர் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருகிறார். ஆனால் முத்துவும் மீனாவும் திரும்பி வருவதற்குள் ரோகிணி அவரது அம்மாவை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் மீனாவுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் ரோகிணி தன் அம்மாவை வித்தியா வீட்டில் தங்க வைக்கிறார். இந்த பக்கம் வீட்டுக்கு வரும் அண்ணாமலை பென்ஷன் பணத்தில் ஒரு லட்ச ரூபாய் கிடைத்ததாக சொல்கிறார். இதை பார்த்து மனோஜ், விஜயா வாயை பிளக்க முத்து மீண்டும் வழக்கம் போல் கிண்டல் அடிக்கிறார். பின் அண்ணாமலை முத்துவை சத்தம் போட்டு விட்டு பணத்தை விஜயாவிடம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.