ஆசிய கோப்பை 2023: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் பங்களாதேஷ்…, இலங்கைக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
ஆசிய கோப்பை 2023: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் பங்களாதேஷ்..., இலங்கைக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
ஆசிய கோப்பை 2023: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் பங்களாதேஷ்..., இலங்கைக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்குபெற்ற இந்த தொடரில், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினர். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த சூப்பர் 4 சுற்றில், பங்களாதேஷ் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, இன்று சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி மோத உள்ளது. இந்த போட்டியிலும், பங்களாதேஷ் அணி தோல்வியை தழுவினால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும். அதாவது, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிய உள்ள சூப்பர் 4 சுற்றின் இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே, ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாவுக்கு வந்த சந்தேகம்.., வசமாக சிக்கலில் மாட்டிய ரோகிணி.., உண்மை தெரியவருமா?? சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here