இனியாவுக்கு நீங்க எப்படி அப்பா ஆக முடியும்.., கோபியிடம் கேள்விகேட்டு நச்சரித்து மயூ.., கோவத்தின் உச்சத்தில் ராதிகா!!

0
இனியாவுக்கு நீங்க எப்படி அப்பா ஆக முடியும்.., கோபியிடம் கேள்விகேட்டு நச்சரித்து மயூ.., கோவத்தின் உச்சத்தில் ராதிகா!!
இனியாவுக்கு நீங்க எப்படி அப்பா ஆக முடியும்.., கோபியிடம் கேள்விகேட்டு நச்சரித்து மயூ.., கோவத்தின் உச்சத்தில் ராதிகா!!

பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோட்டில் கோபி இனியாவை வருத்தத்துடன் பார்க்கிறார். அப்போது மயூ வாங்க டாடி போலாம் என்கிறார். இதை பார்த்த இனியா கண் கலங்குகிறார். பிறகு பக்கத்தில் இருந்த மற்றவர்கள் இனியா அப்பா வேற கல்யாணம் பண்ணிகிட்டாரு என பேசுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் பாக்கியா அந்த இடத்தில் இருந்து இனியாவை அழைத்து செல்கிறார். பிறகு இருவரும் டீச்சரை பார்த்து விட்டு கிளம்புகின்றனர். மறுபுறம் கோபி, ராதிகா மயூவின் டீச்சரை சந்தித்து விட்டு வெளியேறுகின்றனர். அப்போது கோபி ராதிகாவிடம் நான் இனியாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்ல மயூ நானும் வருகிறேன் என உடன் வருகிறார். கோபி இனியாவிடம் நா உங்க டீச்சர மீட் பண்ணவா? என கேட்கிறார்.

இனியா ஒன்னும் தேவை இல்ல ஏன் அம்மா இருக்காங்க டாடி என சொல்லுகிறார். அடுத்து மயூ கீழே வந்ததும் நீங்க எனக்கு யாரு என கேட்க டாடி என சொல்ல அப்போ இனியா அக்காவுக்கும் நீங்க டாடியா என கேட்க ஆமாம் என கோபி சொல்ல அது எப்படி என கேட்கிறார். ஆனா இதற்கு கோபி ஏதேதோ சொல்லி மழுப்புகிறார். இதை பார்த்த ராதிகா கோவத்துடன் காரில் அமர்கிறார்.

அப்படி பாக்காதீங்க ஷிவானி.., ஒரே லுக்கில் அவுட் ஆன இளவட்டங்கள்!!

மறுபுறம் இனியா, பாக்கியாவிடம் டாடி பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல என சொல்லி அழுகிறார். பிறகு பாக்கியா இனியாவை சமாதானப்படுத்தி ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார். அங்கு இனியாவுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி தருகிறார். இதற்கு இனியா எனக்கு பிடிச்சது எப்படிம்மா உனக்கு தெரியும் என கேட்கிறார். அதற்கு பாக்கியா எனக்கு எல்லாம் தெரியும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here