தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ் – கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு!!

0
தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ் - கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு!!

தமிழகத்தில், உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, இதற்கான புதிய விலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 கொள்முதல் விலை உயர்வு:

 தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் மாவட்ட அளவிலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இந்த சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து, பாக்கெட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில், பால் பாக்கெட்களின் விலை சரமாரியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் விவசாயிகள், தங்களுக்கு எப்போது பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஏனெனில் கடந்த, 2019 ஆம் ஆண்டு பசும்பால் விலை லிட்டருக்கு 32 ஆகவும் எருமை பால்விலை லிட்டருக்கு ரூபாய் 42 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு விவசாயிகளுக்கான விலை உயர்வு என்பது இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(04.11.2022)-முழு விவரம் உள்ளே!

இதை அடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பசும்பால் விலை லிட்டருக்கு ரூபாய் 35 ஆகவும், எருமை பால் விலை ரூபாய் 44 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை நவம்பர் 5ம் தேதியான நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மாநிலம் முழுவதும் உள்ள 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here