Sunday, May 5, 2024

வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!!

Must Read

500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் ஜென்ம பூமியான அயோத்தியாவில் இன்று அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ராமர் ஜென்ம பூமி:

கடந்த பல வருடங்களாக மிகுதியாஹா சர்ச்சைக்கு உள்ளன, வழக்கு தான் ராமர் கோவில் விவகாரம். இங்கு தான் ராமர் பிறந்தார் என்றும், இங்கு அவருக்கு கோவில் ஒன்றை கட்ட வேண்டும் என்று இந்துக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ஒரு வழியாக ராமர் கோவில் கட்ட 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், அதற்கான பணிகளில் துரிதமாக செயல்படுத்தப்பட்டன.

கோவிலுக்கான பணிகள்:

ராமர் கோவில் பணிகளை மேற்கொள்ள என்று ஒரு தனி அறக்கட்டளையை மத்திய அரசு நியமித்தது. இந்த கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாடும் விழா இன்று நடந்தது. இந்த விழாவிற்கு வந்து அடிக்கல் நட்ட பிரதமர் மோடி அழைக்கப்பட்டார்.

பிரதமர் விஜயம்:

இதனால், இன்று காலை 9.30 மணி அளவில் டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் புறப்பட்டார். பின்பு, அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியில் விழா நடக்கும் இடத்திற்கு 11.30 மணியளவில் தரையிறங்கினர்.

பிரதமர் 29 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வருகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது. முதலில், அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று பிராத்தனை மேற்கொண்டார். அங்கு அவருக்கு தகுந்த சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு, அவருக்கு உரிய மரியாதைகள் செய்யப்பட்டன.

அடிக்கல் நாட்டு விழா:

ராமஜென்ம பூமி வளாகத்தில் பாரிஜாத பூ செடியை நட்டு வைத்தார். 12.15 மணியளவில் அடிக்கல் நாடுவதற்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்பு, 40 கிலோ மதிப்பான வெள்ளி செங்கல் கற்களை நிறுவி, அடிகள் பணிகளுக்கு அடித்தளமிட்டார்.

லெபனான் வெடி விபத்தில் 73 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!!

poojas in hanumam temple
poojas in hanumam temple

இந்த விழாவில் மொத்தமாக 175 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். கொரோனா பரவல் அபாயத்தில் பிரதமர் அருகில் வர யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கோயிலின் உருவம் பொறித்த தபால் தலை ஒன்றை அம்மாநில அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. 2 மணி அளவில் பிரதமர் டெல்லி திரும்ப உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -