சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி – பார்வையற்ற மதுரை இளம்பெண் சாதனை!!

0
purana sunthari
purana sunthari

மதுரை சிம்மக்கல் மணிநகரம் பகுதியை சேர்ந்த பார்வையற்ற இளம்பெண் சிவில் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். தனது 5 வயதில் உடல்நல குறைவால் பார்வை இழந்த பெண் தொடர்ந்து 5 முறை சிவில் தேர்வு எழுதி 5 வது முறையாக எழுதிய தேர்வில் வெற்றியை கண்டுள்ளார். வெற்றி பெற்ற பெண்ணுக்கு வாழ்த்துக்களை குவிந்த வண்ணம் உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சிவில் தேர்வில் மதுரை சேர்ந்த பார்வையற்ற பெண் தேர்ச்சி

மதுரை மாவட்டம் சிம்மகல் மணிநகரத்தில் வசித்து வரும் முருகேசன் ஆவுடைதேவி ஆவார்கள். முருகேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் முதல் பெண் இரண்டாவது ஆண் என உள்ளனர். மூத்த மகளான பூரண சுந்தரிக்கு 25 வயதாகிறது, 5 வயதில் பார்வை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதால் சுந்தரிக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது. சுந்தரிக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் அந்த ஆர்வம் சற்றும் குறையாததால் தொடர்ந்து பெற்றோர் உதவியுடன் படித்து வந்துள்ளார்.

sunthari
sunthari

தனது பள்ளி காலத்தில் சுந்தரி பள்ளி தேர்வுகளிளிலும் முதன்மை ஆக திகழ்ந்துள்ளார்.10 ம் மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்று பின் BA English பட்டத்தை மதுரை பாத்திமா கல்லூரியில் முடித்துள்ளார். இக்கட்டான குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வி ஆர்வத்தை குறைக்காமல் மக்கள் பணிக்கு செல்ல சிவில் சேவை தேர்வுக்காக கடினமாக உழைத்துள்ளார், பின் 2016 ஆம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதி வந்த சுந்தரி தேர்ச்சி பெறவில்லை நேர்முகத்தேர்வு வரை சென்று வெற்றியை தழுவி இருக்கிறார். சற்றும் மணம் நோகாமல் 2019ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை 4 வது முறையாக எழுதினார். தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிட்ட நிலையில் 829 பேர் தேர்ச்சி பெற்ற பட்டியலில் 286 இடத்தை பெற்றுள்ளார். இவரது விட முயற்சியால் வெற்றி பெட்ரா இவர்க்கு வாழ்த்துக்கள் பல குவிந்த வண்ணம் இருக்கிறது.

தனது வெற்றி பற்றி சுந்தரி கூறியதாவது, எனது சிறு வயத்தில் இருந்து என் அம்மா எனக்கு ஒரு ஆசிரியராக இருந்து பாடங்களை சொல்லித்தருவார் நானும் நன்றாக கவனித்து கற்றுகொண்டது பெரும் உதவியாக இருந்தது. நன் ஒரு பறவையற்றவள் என்ற என்னக்கு வராதளவுக்கு என்னை பார்த்துக்கொண்டனர் என் பெறோர்கள். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு தேர்வுக்காக சென்னையில் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையம் தான் உதவியது.

purana sunthari
purana sunthari

சைதை துரைசாமி அவர்கள் ஒவ்வொரு முறையும் என்னால் முடியும் என்றும் ஊக்குவிப்பர் மற்றும் என்னுடன் இருந்த நண்பர்களின் உதவியாலும் சில பொருளாதார உதவியாலும் நான் பயின்று இந்த வெற்றியை பெற்றேன். இந்த தருணம் என்னால் மறக்க முடியாதது ஆகும். நான் நேர்கொண்ட சவால்களே என்னை ஆட்சிப் பணியில் அமர வேண்டும்என தோன்றியது அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்கவும் திட்டங்களை வகுக்கவும் வேண்டும் என்று தூண்டியது.அது இப்போது நடந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்களை நேரடியாக கொண்டுசேர்க்க குடியுரிமை ஆட்சிப்பணியில் இருந்து செய்ய விரும்புகிறேன். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சுந்தரி என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here