அமேசானில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம் – ரசிகர்கள் ஷாக்!!

0
master
master

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படம் அமேசானில் ஆகஸ்ட் 14 வெளியாக உள்ளதாக அமேசான் நிறுவனம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகஸ்ட் 14 மாஸ்டர் ரிலீஸ்

மாநகரம், கைதி  படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் தளபதி விஜயை வைத்து தயாராக்கிய படம் தான் மாஸ்டர். மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் இந்த படம் 2020 ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

master
master

கொரோன பரவல் இன்னும் குறையாமல் இருப்பதால் மக்களை ஊரடங்கில்தான் இருக்கிறார்கள் எனவே இந்த மாஸ்டர் படத்தை OTT முறையில் ரிலீஸ் பண்ணுவதாக சில தகவல்கள் வெளியாகின. ஓடிடி தளங்களும் படத்தை மாஸ்டர் படத்தை வாங்குவதற்கு பலமுறை கேட்டுள்ளனர்,ஆனால் படம் திரையரங்கில் தான் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் சொல்லியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் படங்களில் லிஸ்டை அமேசான் அறிவித்தது. அதில் மாஸ்டர் வரும் ஆகஸ்ட் 14 அன்று ரிலீஸ் என வெளியிட்டருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின் ஆராய்ந்து பார்த்ததில் அது ஹாலிவுட் படத்தின் பெயர் என்று தெரிந்தது. இதை அறிந்த ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து மாஸ்டர் படத்தை பெரும் வெற்றி படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here