இன்று IND VS PAK ஆசிய கோப்பை – டாஸ் வெல்லும் அணி…! இதை மட்டும் செய்தால் போதுமா…?

0
இன்று IND VS PAK ஆசிய கோப்பை - டாஸ் வெல்லும் அணி...! இதை மட்டும் செய்தால் போதுமா...?
இன்று IND VS PAK ஆசிய கோப்பை - டாஸ் வெல்லும் அணி...! இதை மட்டும் செய்தால் போதுமா...?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக தென்படுகிறது.

ஆசிய கோப்பை 2022!

ஆசிய கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் முடிவடைந்த நிலையில் நேற்று சூப்பர் 4 சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னதாக தகுதி சுற்று ஆட்டத்தில் மோதி பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெறும் ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இந்த மைதானம் டாஸ் வென்று சேஸிங் செய்யும் அணிகளுக்கே அதிக அளவு கை கொடுக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்தியா இதற்கு முன்னர் நடைபெற்ற இரு போட்டிகளிலுமே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற அனைத்து போட்டியிலும் பந்து வீச்சை தேர்வு செய்த அணியே அதிக வெற்றிகளை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் டாஸ் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது.

இதனால் இரு அணி கேப்டன்கள் ஆன பாபர் அசாம் மற்றும் ரோகித் சர்மா இவர்கள் இருவருமே இந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். மேலும் ஏற்கனவே இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்லும் முனைப்பில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது சண்டையாக மாறும் அளவிற்கு போய்க் கொண்டுள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here