இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., ரூ.10,000க்கு மேல் பணம் பெற முடியாது? ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடு!!!

0
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., ரூ.10,000க்கு மேல் பணம் பெற முடியாது? ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடு!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரதாப்கர் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பை சர்வோதய கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, அதில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

IPLல் இருந்த சிறிது காலம் ஓய்வு.. இணையத்தில் வைரலாகும் மேக்ஸ்வெல்லின் கருத்து!!

அதன்படி ரிசர்வ் வங்கியின் விதித்த கட்டுப்பாடுகள்:

  • மேற்கண்ட இரு வங்கிகளிலும் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு ஆகிய கணக்குகளில் இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மொத்த தொகையில் ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது.
  • சர்வோதய கூட்டுறவு வங்கி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி அனுமதியின்றி எந்தஒரு கடன் மற்றும் முன் பணத்தை வழங்குவதோ, புதுப்பிக்கவோ, முதலீடு செய்யவோ கூடாது.
  • ஆனாலும் தகுதியான டெபாசிட்தாரர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் கிளைம் தொகையாக ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • இந்த நடவடிக்கை வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்த மட்டுமே தவிர உரிமத்தை ரத்து செய்வது இல்லை எனவும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here