மக்களவை தேர்தல் எதிரொலி: ரயில் நிலையங்களில் ‘மோடி உணவகம்’., பாஜக வேட்பாளர் தமிழிசை வாக்குறுதி!!!

0
மக்களவை தேர்தல் எதிரொலி: ரயில் நிலையங்களில் 'மோடி உணவகம்'., பாஜக வேட்பாளர் தமிழிசை வாக்குறுதி!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 17) மாலை முதல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., ரூ.10,000க்கு மேல் பணம் பெற முடியாது? ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடு!!!

அதில்,

  • அம்மா உணவகங்களை போல் ரயில் நிலையங்களில் ‘மோடி உணவகம்’ அமைக்கப்படும்.
  • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும்.
  • வேளச்சேரி to பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
  • சோழிங்கநல்லூரில் பெரிய அளவிலான ESI மருத்துவமனை உருவாக்கப்படும்.
  • குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, கோதாவரி நீரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மீனவ கிராம பெண்களின் நலன் கருதி ‘மீனவ அக்கா’ குழுக்கள் அமைக்கப்படும் என வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here