ஆசிய கோப்பை 2023.., பாகிஸ்தான் செல்லாது…, பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு!!

0
ஆசிய கோப்பை 2023.., பாகிஸ்தான் செல்லாது..., பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு!!
ஆசிய கோப்பை 2023.., பாகிஸ்தான் செல்லாது..., பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு!!

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணி குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2023:

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் நிலவும். இந்த இரு அணிகளும், கடைசியாக ஆசிய கோப்பை தொடரில் மோதின. இதனை தொடர்ந்து, வரும் 23ம் தேதி டி20 உலக கோப்பையில் இந்த இரு அணிகளும் மோத உள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த தொடருக்காக இந்திய அணி முதலில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விருப்பம் உள்ளதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாக முன்பு தகவல்கள் பரவலாக வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது இது குறித்து பிசிசிஐ ஒரு அறிவிப்பு ஒன்றை வெயிட்டு உள்ளது.

T20 World Cup : பிளேயிங் லெவன் பற்றி நல்ல முடிவு என்கிட்ட இருக்கு – பகீர் கிளப்பிய கேப்டன் ரோஹித் சர்மா!!

அதில், இந்திய அணி 2023 ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இரு நாட்டுக்கும் பொதுவான ஒரு இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இதனால், அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை நடைபெறும் இடத்தில் மாற்றம் ஏற்படுமா அல்லது இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து விலகுமா என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here