“ஒரு ரூபாய்க்கு சட்டை” கடைக்கு முந்தியடித்து சென்ற இளைஞர்கள்.., தஞ்சாவூரில் ஏற்பட்ட பரபரப்பு!!

0

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் ஜவுளி கடையில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக ஒரு ரூபாய்க்கு சட்டை விற்கப்பட்டதால் இளைஞர் கூட்டம் அலைமோதியது.

ஒரு ரூபாய் சட்டை:

மக்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வரும் பண்டிகை தான் தீபாவளி. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியின் போது மக்கள் புத்தாடைகளை போட்டு வெடிகள் வெடித்து வெகு சிறப்பாக அந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இன்னும் தீபாவளிக்கு ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது இருந்து ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் ஜவுளி கடையில் இன்று ஓர் ஆஃபர் போடப்பட்ட நிலையில் இளைஞர் கூட்டம் எகிறியது. அதாவது அக்டோபர் 18ம் தேதி இந்த தனியார் ஜவுளி கடைக்கு முதலில் வரும் 100 பேருக்கு சட்டை ஒரு ரூபாய் என்று அறிவித்தனர்.

இந்த  ராசிக்காரங்களா நீங்க?? தொழில் பெறுக போகுது, காதல்  கைகூட  போகுது.., இன்றைய ராசிபலன்!!

Editor's Pick: Best 6 Last-Minute Shopping Places for Deepavali in Malaysia | Astro Ulagam

இந்த தகவலை அறிந்த இளைஞர்கள் அதிகாலையிலே கடைக்கு சென்று வரிசையில் நின்றனர். அதன் பிறகு கடை திறந்ததும் முண்டியடித்து வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடை நிர்வாகிகளால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் காவல்துறையின் உதவியை நாடி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here