ஜெயலலிதா இறப்பில் தொடரும் மர்மங்கள்.,, ஆறுமுகசாமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

0
ஜெயலலிதா இறப்பில் தொடரும் மர்மங்கள்.,, ஆறுமுகசாமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குழப்பமான அறிக்கைகள்:

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4ம் தேதி மதியம் 3-3.50 மணிக்குள் அவர் இறந்துவிட்டதாக இரு சாட்சிகளின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமார் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியம் ஆக்கப்பட்டன. அவர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது

“ஒரு ரூபாய்க்கு சட்டை” கடைக்கு முந்தியடித்து சென்ற இளைஞர்கள்.., தஞ்சாவூரில் ஏற்பட்ட பரபரப்பு!!

மேலும் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பின் டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஷமின் சர்மா உள்ளிட்ட மருத்துவர்கள் பரிந்துரை படி அவருக்கு ஆஞ்சியோ அல்லது அறுவை சிகிச்சை ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் பல்வேறு குழப்பமான மற்றும் மர்மமான தகவல் உள்ளதால், இது தொடர்பான விசாரணைக்கு இன்று அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here