#INDvsENG டெஸ்ட் – முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அஸ்வின்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது. அப்போது முதல் ஓவரில் முதல் பந்திலேயே அஸ்வின் விக்கெட் எடுத்துள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் முதலாவதாக பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்தியா அணி தரப்பில் பும்ராஹ் மற்றும் அஸ்வின் தலா விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். அதன்பின்பு இந்தியா அணி தனது முதல் இன்னங்ஸை துவக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டியில் இந்தியா அணிக்கு பௌலிங் மற்றும் பேட்டிங்கில் சென்னை ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். காரணம் பௌலிங் மற்றும் பேட்டிங்கில் இந்தியா அணி படுமோசமாக செயல்பட்டது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்தியா அணி தரப்பில் அதிகபட்சமாக பாண்ட் 91 மற்றும் சுந்தர் 85 ரன்களை குவித்துள்ளனர்.

உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கு பாதிப்பு – ரிஷப் பாண்ட் நிதியுதவி!!

தற்போது இந்தியா அணி முதல் இன்னிங்சில் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் சிப்லே களமிறங்கினர். இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் முதல் பிந்திலையே அஸ்வின் பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். துவக்கத்திலையே இங்கிலாந்து அணி சற்று நடுக்கத்தை கண்டுள்ளது. தற்போது களத்தில் சிப்லே மற்றும் லாரன்ஸ் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 27/1

சிப்லே – 12*
லாரன்ஸ் – 12*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here