அதிவேகமாக பரவும் ‘தென்ஆப்பிரிக்க’ கொரோனா வைரஸ் – 40க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்பு!!

0

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலக நாடுகளில் 40க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த உருமாறிய வைரஸ் தாக்கியுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்

கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதி ஐக்கிய நாடுகளின் சுகாதாரத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் ‘பி 1351 என்று பெயரிடப்பட்ட, தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இதுவரை 40 க்கும் மேற்பட்ட நாடுகளை நாடுகளை தாக்கியுள்ளது’. தென் ஆப்பிரிக்காவில் 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வகை வைரஸ் மக்களை தாக்க தொடங்கியது. இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் 23 ம் தேதி இருவரை தாக்கியது. தொடர்ந்து இங்கிலாந்தில் வேகமெடுத்த இந்த உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த துவங்கியது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சாதாரண வைரஸை காட்டிலும், இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் அதிகமான பாதிப்புகளை உள்ளடக்கியது என்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. தொடர்ந்து அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி இத்தகைய வைரஸை அளிக்ககூடிய வல்லமை உடையது என்று அந்நிறுவனம் அறிவித்தது. ஆனால் இத்தகைய மருந்துகளை குளிரூட்டும் இடங்களில் மட்டும் வைத்துதான் பாதுகாத்து, பயன்படுத்த வேண்டும் என கண்டறியப்பட்டது.

“கொரோனாவிற்காக விளக்கேற்றியதை கூட கிண்டல் செய்தனர்” – பிரதமர் வருத்தம்!!

ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் இத்தகைய குளிரூட்டும் வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை உருவானது. ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார நெருக்கடியினால், இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரோஜெனெகா தடுப்பு மருந்துகள் இத்தகைய வைரஸை 90% அளிக்கக்கூடியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here