அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது – நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்!!

0
UGC
UGC

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வுகள்:

கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இறுதிப்பருவ மாணவர்களை தவிர்த்து, பிற மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

arrear exams updates
arrear exams 

இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் லட்சக்கணக்கான அரியர் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக முதல்வரை வாழ்த்தி பேனர் வைத்து அமர்களப்படுத்தினர். அரசின் இந்த முடிவை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் உள்ள நிலையில், அரியர் மாணவர்களுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்கள் தேர்ச்சி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் யுஜிசி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது, கண்டிப்பாக தேர்வுகளை நடத்த வேண்டும். மேலும் இறுதிபருவ மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here