Saturday, May 18, 2024

தமிழக கால்நடை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – அமைச்சர் வெளியீடு!!

Must Read

இந்த கல்வியாண்டில் கால்நடை படிப்புகளுக்கான சேர்க்கையில் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தற்போது 13 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்புகள்:

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளுக்கான மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்தே தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்படுகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 15,580 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது 13 ஆயிரம் பேர் கொண்ட தரவரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராமகிருஷ்னன் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பேட்டி:

பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழகத்தில் உள்ள 15 ஆயிரம் மாணவர்கள் இந்த மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தற்போது 13 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசை பட்டியலை பார்த்து முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுமாயா என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர் இரண்டாம் இடத்தையும், கோவையை சேர்ந்த கோகிலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் பி.டெக்., பிரிவில் தருமபுரியைச் சேர்ந்த சிவகனி முதலிடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த ரித்தி இரண்டாவது இடத்தையும், விழுப்புரத்தைச் சேர்ந்த நிவேதா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தரவரிசையில் இடப்பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கு எனது பாராட்டுகள்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -