பாட்டி ஸ்டைலில் வறுத்து அரைத்த “கிராமத்து மீன் குழம்பு” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

வறுத்த அரைத்த கிராமத்து ஸ்டைல் மீன்குழம்பு. ஒருமுறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் அசந்து போவாங்க. பாக்கெட் மசாலாவை பயன்படுத்தி வைக்கிறதை விட இந்த மாதிரி நாமலே மசாலா அரைச்சு மீன்குழம்பு வைக்கும்போது ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் இருக்கும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மீன் – 1 கிலோ

பெ. வெங்காயம் – 1

சி. வெங்காயம் – 10

ப. மிளகாய் – 2

தக்காளி – 5

இஞ்சி, பூண்டு – 2 துண்டுகள்

புளி கரைசல் – ஒரு கப்

மிளகு – 2 டீ ஸ்பூன்

மல்லி – 2 டீ ஸ்பூன்

சீரகம் – 1 டீ ஸ்பூன்

கடலை பருப்பு – 3 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

கொத்தமல்லி, கருவேப்பிலை

உப்பு , எண்ணெய்

பட்டை, கிராம்பு, இலை

செய்முறை:

முதலில் மிளகு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு ஆகியவற்றை வறுக்க வேண்டும். தனியாக சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி தண்டு, ஒரு தக்காளி ஆகியவற்றை நல்லெண்ணையில் வதக்கி வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, இலை, அண்ணாச்சி பூ ஆகியவற்றை சேர்த்து நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் மீன் துண்டுகளை சேர்த்து கிளறாமல் உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை மேலே தூவி மூட வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மீன் வெந்தவுடன் அரைத்த மசாலா, தக்காளி மற்றும் புளி கரைசலை சேர்த்து 15 நிமிடம் திறந்தவாறு கொதிக்க விட வேண்டும். கரண்டியை வைத்து கிளற கூடாது. ஏனெனில், மீன்கள் கரைந்து விடும். 15 நிமிடம் கழித்து கீறிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம். காரம் தேவைபட்டால் மிளகு தூள் சேர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here