அமெரிக்க போராட்டத்தில் ஐபோன்கள் கொள்ளை – திருடர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை..!

0
Apple
Apple

அமெரிக்காவில் கறுப்பினர் கொலைக்காக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து ஐபோன்களை திருடிய கொள்ளையர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொள்ளையடிக்கும் கும்பல்:

அமெரிக்காவில் ஜார்ஜ் பிலோய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்தை எதிர்த்து அங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. வெள்ளை மாளிகை வரை சென்ற போராட்டத்தால் நாடே போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டத்தை பயன்படுத்தி சிலர் பூட்டப்பட்டு உள்ள கடைகளை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்கின்றனர். அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையகங்கள் தற்போது திறக்கப்பட்டன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் போராட்டத்தின் போது கடையை உடைத்த கும்பல் அங்கிருந்து ஐபோன்களை திருடிச் சென்று விட்டனர். இந்நிலையில் திருடப்பட்ட போன்களை ஆப்பிள் நிறுவனம் தற்போது ட்ராக் செய்ய தொடங்கியுள்ளது. எனவே நாங்களாக கண்டுபிடிப்பதற்கு முன்பு நீங்களாக போன்களை ஒப்படைத்து விடுமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளது. பலரும் திருடப்பட்ட ஐபோன்களின் படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் திருடப்பட்ட போன்களை செயலிழக்க செய்து வருகின்றன.

‘அம்மா, கடவுளிடம் நான் அனைத்தையும் கூறுவேன்’ – நாட்டை உலுக்கிய யானை கொலையின் கார்ட்டூன்கள் வைரல்..!

ஆப்பிள் ஸ்டோரில் காட்சிக்காக வைக்கப்படும் ஐபோனில் பிரத்யேக ட்ராக்கிங் செயலி பொருத்தப்பட்டு இருக்கும். எனவே லோக்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருப்பதால் திருடப்பட்ட போன்களை தாமாக முன்வந்து ஒப்படைத்து விடுங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here