சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை..!

0
Chennai Corona
Chennai Corona

சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் பேர் பாதிக்க பட வாய்ப்பு உள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

சென்னையில் நோய் தொற்று:

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக சென்னையில் நோய் தொற்று அதிகமாக நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்க பட்டு உள்ளனர். இந்நிலையில் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை:

அந்த ஆய்வறிக்கையில் ஜூன் இறுதியில் 1.34 லட்சம் பேர் கொரோனா தோற்றால் பாதிப்புக்கு உள்ளவர்கள் என்று தெரிவித்து உள்ளது. மேலும் 1.50 லட்சத்தை ஜூலை 15 ஆம் தேதி அது எட்டி விடும் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளது. இது குறித்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையின் மூத்த பேராசிரியர் டாக்டர் ஜி. சீனிவாஸ் கூறுகையில், “ஜூலை 15 ஆம் தேதிக்குள் 1.50 லட்சத்தை எட்டும் கொரோனா அக்டோபர் மாத நடுவில் உச்சம் பெரும்.” என்று ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளதாக கூறினார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த முதற்கட்ட ஆய்வறிக்கையை பல்கலைகழகம் சார்பில் ஏப்ரல் தொடங்கி மே முதல் வாரத்தில் அரசாங்கத்திடம் சமர்பித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அரசாங்கத்திடம் தொற்றை விரட்ட போதுமான படுக்கைவசதி, இடவசதி, தனிமைப்படுத்த வசதிகள் மற்றும் ஐ.சி.யுக்கள் இருப்பதாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,000 முதல் 27,256 ஆக உயர்ந்து உள்ளது. சென்னை இல் மட்டும் மார்ச் 7 இல் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,693 ஆகும்.

இதுகுறித்து மூத்த விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் கூறுகையில் “ஆராய்ச்சியாளர்கள் தெய்வங்களும் இல்லை, இது அவர்களின் யூக முடிவுகளும் இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக அவர்களின் கணிப்புகள் உண்மையாக இருந்ததால், பல சமூக காரணிகள் இருப்பதால் வரும் மாதங்களில் அது இன்னும் தவறாக போகலாம் என்று நாம் கூற முடியாது. ஆனால் இவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அறிகுறிகள் இப்போது உள்ளது” என்று கூறினார்.

மேலும் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் ” தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 9,034 பேர் மீண்டு உள்ளனர்.1000 கட்டுப்பட்டு மண்டலங்களில் கடந்த 14 நாட்களில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை. சென்னையில் அதிக பாதிப்பு உள்ளது என்றால் முழு நகரமும் பாதிப்பு அடையவில்லை. அதிக நெரிசல் பகுதிகளான ராயபுரம், அண்ணா நகர், தேனம்பேட்டை மற்றும் கோடம்பாக்கத்தில் பரவல் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here