Sunday, May 5, 2024

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா சஸ்பெண்ட்?? – தமிழக அரசு அதிரடி முடிவு!!

Must Read

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த சுரப்பா விரைவாக தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என அரசு வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. தற்போது ட்விட்டரிலும் #TNgovtDismiss_Surappa என்ற கேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக பதவி வகித்து வருபவர், சுரப்பா. அவர் அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அரியர் மற்றும் பலக்லைக்கழத்தின் சிறப்பு அந்தஸ்து குறித்து தன்னிச்சையாக எஐசிடிஇ முகாமைக்கு கடிதம் எழுதினார். இதனால் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இப்படியாக இருக்க இவர் மீது 280 கோடி ரூபாய் ஊழல் வழக்கு ஒன்று உள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பல அரசியல் பிரமுகர்களும் முதல்வரை கேட்டுக்கொண்டனர். குறிப்பாக திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார். இதனை அடுத்து தமிழக அரசு அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. தொடர்ச்சியாக அவர் மீது புகார்கள் வந்த நிலையில் இருந்ததால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

எந்த பிரச்னையும் எனக்கு இல்லை:

இந்த விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதியான கலையரசன் விசாரிக்க உள்ளார். புகார்களின் அடிப்படியில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இது போன்று எதிராக்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவர் பதவியில் இருக்கும் போது விசாரணையினை மேற்கொண்டால் சரியாக இருக்காது என்ற காரணத்தால் அவரை சஸ்பெண்ட் செய்யலாமா? என்ற ஆலோசனையில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து துணைவேந்தர் சுரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் எந்த வித ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. நான் இந்தியாவின் மிகவும் உயர்வாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் கூட பணிபுரிந்துள்ளேன். எனது கை மிகவும் சுத்தமானது. விசாரணை மேற்கொள்வதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. விசாரணை கமிட்டி தனது வேலையினை செய்யட்டும். எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். தற்போது ட்விட்டரில் #TNgovtDismiss_Surappa என்ற கேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -