செப்.22 முதல் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0
Online exams
Online exams

அண்ணா பல்கலைக்கழக இறுதிப்பருவ மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கு முன்னராக பயிற்சி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,

இறுதிப்பருவ தேர்வுகள்:

இந்தியாவில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதிப்பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆன்லைன் மற்றும் நேரில் வந்து எழுதுதல் (ஆப்லைன்) என இரு முறைகளில் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்து இருந்தார். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் தேர்வுகள் எழுதலாம் எனவும், இதனை அந்தந்த கல்லூரிகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக செப்டம்பர் 22 முதல் 29ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்த படி தேர்வுகளை எழுதலாம் எனவும், பயிற்சி தேர்வுகளில் இது குறித்த வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

Anna univ
Anna univ

கணினி, வெப்கேம், இணைய வசதி உள்ளிட்டவை ஆன்லைன் தேர்வுகளுக்கு முக்கியமான ஒன்று. ஆனால் தமிழக மாணவர்களிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் ஆன்லைன் தேர்வுகளில் சிக்கல்கள் இருப்பதாக கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். எனினும் இதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தி தரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here