விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு எப்படி வாங்குவது?? – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

0
kisan-credit-card
kisan-credit-card

கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டமாகும். அதாவது விவசாயிகள் அவசர தேவைக்காக கடன் பெறவும் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இப்பொழுது இந்த கிசான் கிரெடிட் கார்டு எப்படி பெறுவது என பார்க்கலாம்.

கிசான் கிரெடிட் கார்டு

ஊரடங்கு காலங்களில் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

kisan-credit-card
kisan-credit-card

கிசான் கார்டு மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். 4 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி??

அருகில் உள்ள வங்கிகளிலேயே நாம் சுலபமாக கிசான் கிரெடிட் கார்டை விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் உள்ள பயனாளருக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும். இப்பொழுது இணையதளத்தில் கிசான் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உங்களுக்கு விருப்பமான வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

kisan credit card
kisan credit card

வங்கி கேட்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது PAN கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஏதேனும் ஒன்று மற்றும் நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றுடன் இணைத்து தரவேண்டும். அதன்பின் வங்கி கடனுக்கு ஒப்புதல் அளித்த உடன் உங்கள் வீட்டிற்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here