மாணவர்கள் அரியர் கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி – சென்னை பல்கலை அறிவிப்பு!!

0
madras-university
madras-university

கல்லூரியில் அரியர் மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் ஏற்பட்ட பிரச்சனையில் தற்போது அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதே அரசின் இறுதி முடிவு என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி பேட்டியளித்துள்ளார்.

அரியர் மாணவர்கள்

கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்ய்ய்யப்பட்டன. அதனை தொடர்ந்து அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்த ரத்தினை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டன.

gowry
gowry

இந்நிலையில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து இருந்தார். அந்த கடிதமும் வெளியாகி இருந்தது. இந்த சர்ச்சைகளுக்கிடையே தற்போது அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதே அரசின் இறுதி முடிவாகும் என்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் UGC, பிற அமைப்புகளிடமிருந்து இந்த அரியர் தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை, தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் மாணவர்கள் அனைவர்க்கும் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here