கருப்பு நிற சேலையில் அச்சு அசலாக நயன்தாரா போலவே காட்சியளிக்கும் அனிகா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகிகளுக்கே கடும் போட்டியாகும் அளவிற்கு மாறி வருகிறார் அனிகா சுரேந்தர். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிகா தற்போது தீபாவளி கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கிறார்.

அனிகா சுரேந்தர்

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுள்ளனர். சிம்பு, நயன்தாரா, ஷாலினி, ஹன்சிகா என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

anikha surendar
anikha surendar

கேரளா பெண்ணான அனிகா மலையாள திரையுலகிலும் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் அவர்க்கு புகழ் கிடைத்தது என்னவோ தமிழ் சினிமாவில் நடித்து தான். ஏனெனில் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழ் நடிகர், நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.

ஏன்னெனில் அனைத்து மொழிகளிலும் தல, தளபதிக்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். மேலும் அஜித் உடன் விஸ்வாசம் படத்திலும் நடித்திருப்பார். அப்படத்தில் அனிகாவின் நடிப்பு வேற லெவல் என்றே சொல்லாம். மேலும் மக்கள் மத்தியில் அனிகா அஜித்தின் ரீல் மகளாகவே தெரியப்படுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

anikha
anikha

அதைத்தொடர்ந்து அச்சு அசலாக நயன்தாரா போலவே காட்சியளிப்பதால் குட்டி நயன்தாரா என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார். மேலும் சில காலமாக பல போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த குழந்தை அனிகாவா இது?? என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வயதிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தும் வந்தனர். ஆனாலும் எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அப்படியே நயன்தாரா தான். இதனால் பலரும் ஷாக்கில் உள்ளனர். மேலும் நயன்தாராவின் 2.0 வெர்சன் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here