ஒரே நாளில் சுமார் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா – கதறும் அமெரிக்கா மக்கள்.!

0

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா

Coronavirus prevention measures take their toll on astronomy | Space

கொரோனாவை தடுக்க பல வல்லுநர்கள் தடுப்பு மருந்தை தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இருந்த போதிலும் இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் 15 லட்சத்து 11 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 88 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்கள் எண்ணிக்கை

ஐரோப்பிய நாடுகளை இந்த கொரோனா நிலைகுலைய செய்துள்ளது. மேலும் இந்த கொரோனா தற்போது அமெரிக்காவை அலற விட்டுவருகிறது. குறிப்பாக அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

What we know and don't about the Americans who died from ...

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

China's coronavirus death toll tops 900 as new cases tick back up ...

இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் எண்ணிக்கை சுமார் 2000 எண்ணிக்கையில் உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here