நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் – ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!!

0

தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான தல அஜித், வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ரொம்ப நாளாக படத்தை பற்றி அப்டேட் எதுவும் வராமல் இருந்த நிலையில் தற்போது அஜித்தின் புதிதாக ஓர் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தல அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச்.வினோத் அந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெற்றியடைந்துள்ளதால் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. தற்போது இவர்களது கூட்டணியில் தல அஜித் வலிமை என்னும் திரைப்படத்தை நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தில் போலீசாக நடித்து வரும் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் தான் ஈஸ்வர மூர்த்தி. கடந்த சில நாட்களாக ரஜினி, விஜய், சூர்யா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அப்டேட் வெளி வந்த வண்ணமாக இருந்தது. ஆனால் வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வராமல் இருந்தது. இதனால் தல ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று கூறி ட்விட்டர் பக்கத்தில் ஹாஷ்டகை ட்ரெண்ட் செய்தும் வந்தனர் தல ரசிகர்கள். தற்போது படப்பிடியிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் வலிமை படத்தை அஜித்தின் 50 வது பிறந்தநாளான வரும் மே மாதம் 1ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

காவல்துறை அதிகாரியாக பிக்பாஸ் ஆரி அர்ஜுனன் – வெளியான புதிய படத்தின் அறிவிப்பு!!

கருப்பு நிற டி ஷர்ட்:

தற்போது சில நாட்களுக்கு முன்பு அஜித் வலிமை படத்தில் வண்டி ஓட்டுமாறு ஓர் புகை படம் வெளிவந்தது. இதனால் தல ரசிகர்கள் குஷி ஆகினர். மேலும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் ஓர் புகைப்படம் வெளிவந்துள்ளது. அதில் தல அஜித் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்து அழகான ஓர் புன்சிரிப்புடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் அனைவரும் படு குஷி அடைந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தல ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here