மீண்டும் குண்டாக மாறிய கீர்த்தி சுரேஷ் – ‘தமிழில் இன்னும் ஒரு ரவுண்டு வருவார்’ என கணிப்பில் ரசிகர்கள்!!

0

நடிகை கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை கூட்டி மீண்டும் குண்டான தோற்றத்துக்கு மாறியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான பென்குவின் படத்துக்கு பிறகு அவர் தனது உடல் எடையை குறைத்திருந்தார். தற்போது மீண்டுமாக உடல் எடையை கூட்டியுள்ளார்.

குண்டான கீர்த்தி சுரேஷ்

நடிகைகள் என்றாலே ஸ்லிம்மாக மெலிந்த தோற்றத்துடன் காணப்படவேண்டும் என இருந்த காலம் மாறி தற்போது உடல் சற்று பருமனாக இருக்கும் நடிகைகள் தான் பெரும்பாலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேசுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் தமிழ் நாட்டில் மாத்திரமல்ல மலையாளம் தெலுங்கு ஆகிய இடங்களிலும் இருக்கிறது.

டிராகன் பழத்தின் பெயர் ‘கமலம்’ என மாற்றம் – குஜராத் முதல்வர் அறிவிப்பு!!

பெரிய கதாநாயகர்களுடன் கமர்சியல் படங்களில் ஜோடி போட்டுவந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற ‘மகாநதி’ படத்திற்கு பின்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார். பெங்குவின் படத்திற்கு பிறகு கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை குறைந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அவரது மெலிந்த தோற்றம் ரசிகர்களுக்கு மிக ஏமாற்றமாக இருந்தது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மீண்டுமாக உடல் எடையை கூட்டியுள்ளார். குண்டான உடலுடன் தற்போது ஏர்போர்ட் வாசலில் நின்றபடி உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற டீசர்டில் ப்ளூ ஜீன்ஸ் அணிந்துள்ள புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தற்பொழுது கீர்த்தி சுரேஷின் கைவசத்தில் அண்ணாத்த, குட் லக் சகி, ரங் தே ஆகிய படங்கள் உள்ளன. கீர்த்தி சுரேஷ் மீண்டும் தமிழில் ஒரு வலம் வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here