மூன்று மாதத்திற்கு பின் பொதுவெளியில் தொழிலதிபர் ஜாக் மா – பின்னணியில் சீன அரசாங்கம்??

0

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சீன தொழிலதிபரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா வை காணவில்லை என சீன ஊடகங்களும் உலகநாடுகளின் தொழில்அதிபர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது பொதுவெளியில் தோன்றியிருக்கிறார் ஜாக் மா.

சீன தொழிலதிபர் ஜாக் மா

சீன நாட்டை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாக் மா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வெளியிடங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதற்கு சீன அரசாங்கத்துடனான மோதல் தான் காரணம் என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஊடகங்களில் பல தகவல்கள் வெளிவந்த நிலையில் இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி சீன வங்கியாளர்களின் பொதுச்சபையில் கலந்து கொண்ட ஜாக் மா சீன அரசின் வங்கித்துறை குறித்த எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேரகிளிக் பண்ணுங்க!!

அதன் பின்னர் தற்போது ஜாக் மா சீனாவின் ஊரக பகுதியை சேர்ந்த ஆசிரியர்களிடம் ஆன்லைனில் கலந்துரையாடியிருக்கிறார். இதை சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவை சேர்ந்த ஊடகவியலாளரான பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்தாவது, ‘ஜாக் மா காணாமல் போகவில்லை. இன்று காலை ஜாக் மா 100 ஊரக ஆசிரியர்களிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக உரையாடியுள்ளார். மேலும் கோவிட் -19 தொற்று ஓய்ந்த பிறகு மீண்டும் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்’ என பதிவிட்டிருந்தார்.

காவல்துறை அதிகாரியாக பிக்பாஸ் ஆரி அர்ஜுனன் – வெளியான புதிய படத்தின் அறிவிப்பு!!

தொடர்ந்து 30 நிமிட வீடியோ ஒன்றையும் அவர் ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோவில் ஜாக் மா சீன மொழியில் அந்த ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘அலிபாபா என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அவருக்கு இந்த நெருக்கடியை கடக்க தெரியும்’ என்கின்றனர் ஜாக் மா வின் ஆதரவாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here