டிராகன் பழத்தின் பெயர் ‘கமலம்’ என மாற்றம் – குஜராத் முதல்வர் அறிவிப்பு!!

0

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரான விஜய் ரூபாணி தற்போது புதிதாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் டிராகன் பழம் என்று அழைக்கப்படும் பழம் காண்பதற்கு தாமரை போல் உள்ளது என்றும் தற்போது அதற்கு ஓர் புதிய பெயரையும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிராகன் பழம்:

தற்போதைய காலத்தில் டிராகன் பலம் என்றால் சிலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த பழத்தில் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது. இந்த டிராகன் பழத்தின் தாயகமாக மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை கருதுகின்றனர். மேலும் இந்த பழம் உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மை சக்திகளை கொண்டுள்ளது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள்!!

இந்த பழத்தில் மொத்தம் 3 விதம் உள்ளது. அது என்னவென்றால் சிவப்பு தோலுடன் சிவப்பு சதை பழம், சிவப்பு தோலுடன் வெள்ளை சதைப்பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் வெள்ளை சதை பழம்ஆகியவையாகும். தற்போது இந்த பழம்குறித்து குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேட்டியாளர்களிடம் பேசிய விஜய் ரூபாணி கூறியதாவது,” டிராகன் பழம் பார்ப்பதற்கு தாமரை போல் தோற்றம் கொண்டுள்ளது. எனவே இதற்கு பெயர்மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். தற்போது டிராகன் பழத்தை, கமலம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here