தலயுடன் 5வது முறையாக ஜோடி சேரும் நடிகை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் அஜீத் நடிக்கவுள்ள 61வது திரைப்படத்தில், ஐந்தாவது முறையாக பிரபல நடிகை ஒருவர் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் அஜித்தின் 61வது படம்

1993ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார் நடிகர் அஜித். தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித்துக்கு ‘தீனா’ படத்தின் மூலம் தல என்ற பட்டம் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. இதுவரை தமிழில் மட்டும் ஏறக்குறைய 50 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் நடிகர் அஜித்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தற்போது நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார் அஜித். ‘வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ஏனென்றால் நடிகர் அஜித் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’ 2019ம் ஆண்டு வெளியானது.

திருமணமான நடிகரை காதலிக்கும் லாஸ்லியா – ஹர்பஜன் போட்ட டிவீட்டால் பரபரப்பு!!

அதன் பின்பாக அவர் நடித்து எந்த படமும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஒவ்வொரு பொது இடங்களிலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அஜித் நடிக்கவுள்ள 61வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அஜித்துடன் ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விசுவாசம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டுமாக இந்த ஜோடி ஒன்று சேரவுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here