தளபதி 65 இயக்குனர் நான் இல்லைங்க – இளம் இயக்குனர் OPEN TALK..!

0

விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை இயக்க போவதாக அஜய் ஞானமுத்து பெயர் அடிபட்ட நிலையில் தளபதி 65 வது படத்தை இயக்க போவது நானில்லை என அறிவித்துள்ளார்.

யார் தளபதி 65 இயக்குனர்..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே சென்றது. முருகதாஸ், சுதா கொங்காரா, லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேனி, ஷங்கர், அஜய் ஞானமுத்து ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

இயக்குனர் அஜய் ஞானமுத்து..!

இந்நிலையில், விஜய்யின் 65 வது படத்தை கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்கு அஜய் ஞானமுத்து கூறியதாவது, இது யார் பாத்த வேலைனு தெரியலையே என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் விஜய்யின் 65-வது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here