
விருமன் படத்தில் ஹிட் கொடுத்த அதிதி, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் மாவீரன் படத்தில் கமிட்டாகியுள்ளார். இவர் இந்த படத்தில் ரிபோட்டராக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. தனது முதல் படத்தில் சொந்த குரலில் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவரது நடனம், சிரிப்பு போன்ற பல விஷயங்களுக்கு ரசிகர்கள் அடிமையாக உள்ளனர்.
ஒரே படத்தின் மூலம் இவ்வளவு பிரபலமான அதிதி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அப்போ அப்போ போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கூட இன்ஸ்டாவில் போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த போட்டோவில் பிங்க் நிற லெஹாங்கா உடை அணிந்து, அதுக்கு மேட்சாக கூலர் போட்டு அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிதியின் அழகில் சொக்கி மனதை பறிகொடுத்து தவிக்கின்றனர். மேலும் இதற்கு ரசிகர்கள் கமெண்ட்டில் விஜய் அண்ணாவுடன் எப்போது நடிப்பீங்க என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.