ஜனார்த்தனன் போட்ட திட்டத்தால் சீரழியும் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!

0
ஜனார்த்தனன் போட்ட திட்டத்தால் சீரழியும் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!
ஜனார்த்தனன் போட்ட திட்டத்தால் சீரழியும் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா அப்பா ஜனார்த்தன் போட்ட திட்டம் பக்காவாக நிறைவேறியுள்ளது. இந்நிலையில் இதையடுத்து என்ன நடக்கும் என்பதில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். இந்நிலையில் ஜனார்த்தனன் அந்த வீட்டை தானே வாங்கி கொள்வதாக சொல்ல, இது மூர்த்திக்கு சிறு தயக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சொந்தத்திற்குள் கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்வது சரியில்லை என தோன்றியதால் சிறிது கால அவகாசம் கேட்டிருந்தார்.

எப்படியோ மீனா, மூர்த்தியிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டார். இதையடுத்து மூர்த்தியும் ஜனார்த்தனனுக்கே வீட்டை கொடுக்க முடிவெடுக்கிறார். ஆனால் இந்த முடிவில் துளிகூட விருப்பம் இல்லாத முல்லையின் அம்மா, அக்கா மூர்த்தி வீட்டுக்கு வந்து சண்டை போடுகிறார்கள். மேலும் நேற்று மீனாவின் அப்பாவிற்கு வீட்டை எழுதி கொடுப்பதற்கு கதிர் முல்லை உட்பட மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் ரெஜிஸ்டர் ஆபிசுக்கு சென்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

அங்கு பெரும் ட்விஸ்ட்டாக மீனாவின் அப்பா, மீனா பெயரில் இந்த வீட்டை ரெஜிஸ்டர் பண்ணுகிறார். இதை கேட்டு மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மீனாவும் தயக்கத்தில் இருந்தார். அப்போது மீனாவின் அப்பா, என்னுடைய சொத்து அனைத்தும் உனக்குத்தான் என கூறி மீனாவை கையெழுத்து போட சொல்கிறார். மீனாவும் கையெழுத்து போட்டு விட்டார், பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு மீனா பெயரில் ரெஜிஸ்டர் ஆகிவிட்டது.

 

இருப்பினும் மீனாவுக்கு தன் பெயரில் தான் இந்த வீட்டை ரெஜிஸ்டர் பண்ண போகிறார் என்ற விஷயம் முன்னதாக தெரியாது.இந்நிலையில் ஐஸ்வர்யா, மீனாவுக்கு எல்லா விஷயமும் முன்னாடியே தெரியும் என தனத்திடம் கூற, தனம் அப்படி இருக்காது என பதில் கூறுகிறார். இனி இந்த விஷயத்தை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் என்ன பூகம்பம் வெடிக்க போகிறதோ? என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here