ஓடிடியில் களமிறங்கும் டாப்  ஹிட்  திரைப்படங்கள்.., அதிகாரபூர்வமாக வெளியான முழு லிஸ்ட் இதோ!!

0
ஓடிடியில்  களமிறங்கும்  டாப்  ஹிட்  திரைப்படங்கள்.., அதிகாரபூர்வமாக வெளியான முழு லிஸ்ட் இதோ!!
ஓடிடியில்  களமிறங்கும்  டாப்  ஹிட்  திரைப்படங்கள்.., அதிக்ராபூர்வமாக  வெளியான முழு லிஸ்ட் இதோ!!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இரண்டு திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடி தளங்கள்:

மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் மொத்த வசூல் 100 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை செப் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டைரி. இப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டைரி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்கள் இன்றி ஒரு மாதத்திற்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. மேலும் இப்படம் நாளை  ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here