
கோலிவுட் திரையில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஷெரின். இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து அசத்தி வந்தார். குறிப்பாக இவர் நடித்த விசில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்து வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்திருந்தார். இதன் பிறகு ஒரு காலகட்டத்திற்கு பின் நடிக்க வாய்ப்பின்றி தவித்து வந்த இவர் சிறிது காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டு விட்டார். அதன் பின் விஜய் டிவி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தியிருந்தார்.
இவ்வாறு திரையுலகுக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியில் காட்டி ரசிகர்களை இம்சை படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது சில கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இளசுகள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.