
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்:
விஜய் நடித்த வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அவர்களின் காம்போவில் முன்னதாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று, பொருளாதார ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இப்படம் லோகேஷ் படம் போன்று இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அடுத்த படம் கண்டிப்பாக என்னோட பாணியில் இருக்கும் இருக்கும் லோகேஷ் உறுதியளித்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதே போல் லோகேஷ் லியோ படத்தை கவனமாக எடுத்து வருகிறார். மேலும் இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியீட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியது. அப்படி பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் கடுங்குளிரில் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மிஷ்கின். கெளதம் மேனன் ஆகியோரின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் KGF புகழ் சஞ்சய் தத் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் படத்தை குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் எடுத்து வரும் நிலையில், நடிகர் சஞ்சய் தத் நடிக்க வேண்டிய காட்சிகள் நிறைவு பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் அடுத்து சென்னையில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thank you @duttsanjay sir, you’ve been such a sweet & down to earth person.Our entire team enjoyed seeing your performance so close by, you rocked as usual sir.
Eagerly waiting to see you back on the sets in the Chennai schedule.
Meendum sandhippom sir❤️
– With Luv,Team #LEO pic.twitter.com/4bPn09c9Ea
— Seven Screen Studio (@7screenstudio) March 17, 2023