தல அஜித்தோட மாமனாரை பார்த்து இருக்கீங்களா?? அப்போவே வேற லெவலில் இருக்கிறாரே!!

0

பேபி ஷாலினி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஷாலினி தமிழ் நாட்டு மருமகள். இதுவரை யாரும் அறிந்திராத நடிகை ஷாலினியின் குடும்ப புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாலினியின் குடும்ப புகைப்படம்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளவர் நடிகை ஷாலினி. சினிமாவில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ஷாலினி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஷாலினி. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட காதலில் சில ஆண்டுகள் கழித்து அவரை திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கும் நடிகை ஷாலினிக்கு ஒரு தங்கையும், அண்ணனும் உண்டு.

யாருப்பா இந்த பிரஷித் கிருஷ்ணா?? இங்கிலாந்தை கதறவிட்ட பந்துவீச்சாளர்!!

ஷாலினியின் தங்கை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்து இந்தியா திரும்பிய ஷாமிலி, நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘வீரசிவாஜி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தவிர சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஷாமிலி.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஷாமிலி நடித்துள்ளது அனைவராலும் அறியப்பட்ட விஷயமாகும். இன்றுவரை மக்களால் செல்லமாக பேபி ஷாமிலி , பேபி ஷாலினி என அழைக்கப்படும் இந்த சகோதரிகளின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here