என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார்…! பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் செட்டி போலீசில் புகார்..!

0

நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் சென்னை போலீஸ் கமிஷினர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர் தர்ஷன், சனம் செட்டியை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சென்ற வருடம் தொலைக்காட்சியில் மக்களிடம் பிரபலமானவர்கள் பட்டியலில் தர்ஷன் 4வது இடத்தையும் பிடித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை சனம் ஷெட்டி தர்ஷன் மீது சென்னை போலீஸ் கமிஷினர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார்..!

சென்னை போலீஸ் கமிஷினர் அலுவகத்தில் புகார் அளித்து விட்டு வெளியே வந்த சனம் ஷெட்டி, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் முன்பே எனக்கும், தர்ஷனும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அது குறித்து அப்பொழுது பேச வேண்டாம் என்று தர்ஷன் என்னை கேட்டுக் கொண்டார். அதனால் நான் அமைதியாக இருந்தேன்.

ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷன் வேறு மாதிரியாக நடந்து கொள்ளத் துவங்கினார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

உடல், மனம் ரீதியாக துன்புறுத்தல்..!

பிக் பாஸுக்கு பிறகு தர்ஷன் தன்னை அசிங்கப்படுத்தியதாகவும், உடலாலும், மனதாலும் துன்புறுத்தினார் எனவும் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். எனக்கு திரைத்துறையில் உள்ள காண்டாக்ட்களை வைத்து நான் தான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு போன்ற பல உதவிகளை செய்து உள்ளேன். என்னை தர்ஷன் குடும்பத்தினர் மிரட்டுகின்றனர். இது குறித்து மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்க உள்ளேன்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

புகாரை மறுத்த தர்ஷன்…!

ஆனால் இந்த புகாரை தர்ஷன் மேனேஜர் மறுத்து விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து தர்சன் எதுவும் விளக்கம் இதுவரை அளிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பொது தர்ஷன் ஷெரின் இடையே காதல் மலர்ந்ததாகவும் அது இந்த பிரச்சனைக்கு ஒரு காரணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here