சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!

0

சீனாவின் ஹவான் நகரில் உருவாகி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் பயோ வெப்பன் (உயிரி ஆயுதம்) தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வெளியானதாக பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

என்னதான் நடக்கிறது சீனாவில்..?

சீனாவில் இதுவரை 210 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். சீனாவில் தொழில்நுட்பங்கள் பலமடங்கு அதிகரித்து விட்டாலும் அங்கு உணவு கட்டுப்பாடு என்பது அறவே கிடையாது. இதுவும் புதுப்புது வைரஸ் கிருமிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சீனாவில் பல தகவல்கள் தங்கள் நாட்டில் இருந்து கசிவதை தடுக்க முடிந்தாலும் இந்த வைரஸை தடுக்க முடியவில்லை. இதனால் அங்கே நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

உயிரி ஆயுத ஆய்வகம்..!

சீனா சிறிது நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் நுண்ணோக்கி படத்தை வெளியிட்டது. அதனை ஆய்வு செய்த பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹவான் நகரில் உள்ள ஒரு இறைச்சி மார்க்கெட்டில் இருந்து தான் வைரஸ் பரவியதாக அந்த நாடு தெரிவித்து அந்த மார்க்கெட்டிற்கும் சீல் வைத்தது. ஆனால் இந்த வைரஸ் ஆனது ஹவான் நகரில் அமைந்துள்ள உயிரி ஆயுத ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சார்ஸ், எபோலாவைத் தொடர்ந்து..!

ஹவான் நகரில் அமைந்துள்ளது ‘உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல, உயிர்க்கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம்’ என தொடர்ந்து கூறி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் உலகை அச்சுறுத்திய சார்ஸ், எபோலா வைரஸ்களும் இங்கிருந்து தான் பரவியதாக பலநாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

என்ன சொலிகிறது உலக நாடுகள்..?

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள உயிரி பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் டிம் ட்ரெவன், ‘2017 ம் ஆண்டே சீனாவின் உயிரி ஆராய்ச்சி மையம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டார். ‘ஹவானின் ஆய்வு மையத்தில் உலகத்தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வைரஸ்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வெளியேறினால் உலகம் முழுதும் பாதிக்கப்படும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

‘ஹவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பது எனது உறுதியான கருத்து’ என்று இஸ்ரேல் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம் கூறி உள்ளார். ‘சார்ஸ், எபோலா’ என்ற வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதை ஏற்கனவே ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இந்தியாவை பாதிக்குமா..?

உலக நாடுகளில் பெரும் பாதிப்பைப் ஏற்படுத்திய எபோலா, சார்ஸ் வைரஸ்கள் இந்தியாவில் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்தியாவின் தட்பவெட்பநிலையினால் வைரஸ்களால் எளிதில் பரவ முடியாது. இதனால் கொரோனா வைரஸின் தாக்கமும் இந்தியாவில் அதிகளவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here