
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ரேஷ்மா. இவர் சன் தொலைக்காட்சியின் சில சீரியல்களில் நடித்து வந்தார். இதன் பிறகு வெள்ளித்திரையில் களமிறங்கி மணல் கயிறு 2, கோ 2, பேய்மாமா போன்ற அடுத்தடுத்து சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து பிக் பாஸில் இவர் கலந்து கொண்டதற்கு தான் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வருகிறார். மேலும் இதில் இவரது தரமான வில்லத்தனமான நடிப்பினால் தற்போது சீதா ராமனை சீரியலில் வில்லி ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து கலக்கி வருகிறார்.
இப்படி கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் பொதுவாக சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாகி இருந்து வருகிறார். அதில் இவரது கவர்ச்சி வலையை வீசி ரசிகர்களை உசுப்பேத்தி வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது இன்றைய க்ளிக்ஸ்களை பதிவிட்டு, ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறார்.