தமிழகத்தில் 2 ஆண்டுகளில் இத்தனை லட்ச ரேஷன் கார்டு விநியோகம்., அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்!!!

0

தமிழகத்தில் ஊராட்சி பகுதிகளை மேம்படுத்த மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் திட்டப்பணிகளை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர், “கடந்த 2 ஆண்டுகளாக புதிய ரேஷன் கார்டுகளை எளிய முறையில் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஆன்லைன் வசதி, சிறப்பு முகாம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் சுமார் 14 லட்சம் நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி பகுதிகளில் கிராம மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம், மின் இணைப்பு, பனை விதை உள்ளிட்ட நலத்திட்டங்கள் விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here