17 வயசுலயே விவாகரத்து.. வீடு வீடா போனேன்.., அப்புறம் தான் இரண்டாவது கல்யாணம்.., ரேகா நாயர் வேதனை!!!

0
17 வயசுலயே விவாகரத்து.. வீடு வீடா போனேன்.., அப்புறம் தான் இரண்டாவது கல்யாணம்.., ரேகா நாயர் வேதனை!!!
17 வயசுலயே விவாகரத்து.. வீடு வீடா போனேன்.., அப்புறம் தான் இரண்டாவது கல்யாணம்.., ரேகா நாயர் வேதனை!!!

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். அந்த படத்தில் அவர் அப்படி நடித்ததற்காக பயில்வான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பட்ட பகலில் பீச்சில் அவரிடம் ஆபாசமாக பேசி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில் நான் காலேஜ் படிக்கும் போது,அதாவது சரியாக 17 வயதில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.எனது பெற்றோர்களின் ஆசைக்காக தான் அந்த திருமணத்தை செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னை நன்றாக பார்த்து கொள்ளவில்லை. அடிக்கடி சண்டை முத்தியதால் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்த போது எனக்கு ஒரு குழந்தை இருந்தது.

அஜித்துடன் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி.., அடேங்கப்பா.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

என் குடும்பத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும், குடும்பம் நடத்துவது சிரமமாக இருந்தது. அதனால் ராப்பகலா பேப்பர் போட்டு தான் குடும்பத்தை பார்த்து கொண்டேன். நகை போட்டு கல்யாணம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்த நான் போராடி ஒரு வீட்டை கட்டினேன். இப்போ ரெண்டு காரு இருக்கு.அப்புறம் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here