தனுஷை விட்டு மாதவனை பிடித்த திருச்சிற்றம்பலம் பட இயக்குனர்.., ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புது அப்டேட்!!

0
தனுஷை விட்டு மாதவனை பிடித்த திருச்சிற்றம்பலம் பட இயக்குனர்.., ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புது அப்டேட்!!
தனுஷை விட்டு மாதவனை பிடித்த திருச்சிற்றம்பலம் பட இயக்குனர்.., ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புது அப்டேட்!!

நடிகை நயன்தாரா அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்த கனெக்ட் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் இறைவன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து ஏகே 62 வில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்த நிலையில் நயன்தாரா அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சந்திரமுகியில் ஜோதிகாவின் நடிப்பை குறித்து விமர்சித்த கங்கனா ரணாவத்!!!

இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் இயக்குனர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கிய யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனவை. இதில் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here