அடக்கடவுளே.., அஜித்தால் கெரியரை இழந்து தவிக்கும் “எதிர் நீச்சல்” சீரியல் பிரபலம்.., கண் கலங்கி பேட்டி!!

0
அடக்கடவுளே.., அஜித்தால் கெரியரை இழந்து தவிக்கும்
அடக்கடவுளே.., அஜித்தால் கெரியரை இழந்து தவிக்கும் "எதிர் நீச்சல்" சீரியல் பிரபலம்.., கண் கலங்கி பேட்டி!!

சின்னத்திரையில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பெருகி கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரி முத்துவை சொல்லவா வேண்டும். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் நடிகை கனிகா. இவர் வெள்ளித்திரையில் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். தற்போது சின்னத்திரையில் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கிய கனிகா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஒரு ஹீரோவால் தான் தன்னுடைய கெரியரை தொலைத்ததாக பேசியுள்ளார்.

‘ஏய் இந்தம்மா’.., எதிர்நீச்சல் குணசேகரனின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

அதாவது நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் கனிகா நடித்திருந்தார். அந்த படத்தில் அம்மாவாக சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு அடுத்தடுத்து அம்மா கேரக்டரில் நடிக்க பல இயக்குனர்கள் கேட்க தொடங்கி விட்டார்களாம் . அஜித் நடித்த அந்த படத்தால் தான் தனக்கு ஹீரோயின் நடிக்க வாய்ப்பு குறைந்தது என்று கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here