அந்த கேரக்டரை எனக்கு கொடுத்திருக்கலாம்., ராஷ்மிகாவின் நடிப்பை குறை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

0
அந்த கேரக்டரை எனக்கு கொடுத்திருக்கலாம்., ராஷ்மிகாவின் நடிப்பை குறை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படி இந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்துள்ள 3 திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது இவர் நடித்துள்ள ‘பர்ஹானா’ திரைப்படம் கடந்த 12 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. மேலும் இப்படம் இஸ்லாமியர்களை தாக்கும் விதமாக அமைந்திருப்பதால் பல இஸ்லாமிய அமைப்புகள் இப்படத்தை தடை செய்யும்படி கோரி வந்தனர். இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் இவரிடம் உங்களுக்கு தெலுங்கு திரையில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என கேட்டுள்ளனர்.

இளங்கலை நீட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு?? இந்த இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்!!!


அதற்கு அவர், விருப்பம் இருக்கிறது. இதற்கு முன் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற தெலுங்கு படத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால் அப்படம் நினைத்த அளவிற்கு வெற்றி படமாக அமையவில்லை. மேலும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி கேரக்டரை எனக்கு கொடுத்திருந்தால், ராஷ்மிகாவை விட சிறப்பாக நான் நடித்திருப்பேன் என நான் நம்புகிறேன் என கூறியுள்ளார். இவரின் இந்த interview இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here