கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷின் புதிய அவதாரம்.., இத உங்ககிட்ட எதிர் பார்க்கல ராக்கி பாய்!!

0
கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷின் புதிய அவதாரம்.., இத உங்ககிட்ட எதிர் பார்க்கல ராக்கி பாய்!!
கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷின் புதிய அவதாரம்.., இத உங்ககிட்ட எதிர் பார்க்கல ராக்கி பாய்!!

சின்னத்திரையில் திரைப் பயணத்தை தொடங்கி தற்போது ராக்கிங் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் தான் நடிகர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவருடைய மார்கெட் எகிற தொடங்கியுள்ளது. மேலும் விளம்பரங்களிலும் இவர் நடிக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெப்சி நிறுவனத்தின் தண்ணீர் ஆதாரம் பிராண்டிற்கான தூதர் நடிகர் யாஷ் என்று சமீபத்தில் பெப்சி நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இது குறித்து நடிகர் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது, ‘பெப்சியுடன் நான் இணைவதிலும், பெப்சி நிறுவனத்தின் பிராண்டின் முகமாக நான் இருப்பதும் எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தை தருகிறது.

சூர்யாவின் புதிய பரிமாணம்.., பல கோடி பட்ஜெட்டில் தயாராகும் ‘வீர்’ திரைப்படம்!!!

மேலும் நான் என்னுடைய வாழ்க்கையை யாருக்கும் அச்சம் மின்றி நான் நினைத்தபடி வாழ்ந்து வருகிறேன். நான் செய்யும் எந்த காரியத்தையும் வெட்கப்படாமல் செய்து வருகிறேன். இந்த 2023 புதிய ஆண்டைத் ஆரம்பிக்க இது ஒரு சிறந்த வழியாக நான் கருதுகிறேன். அதுமட்டுமின்றி என்னுடைய ரசிகர்கள் இந்த அவதாரத்தில் ஏற்றுக்கொள்வார்களா என்பதை காண்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here