சின்ன கலைவாணர் நடிகர் விவேக் காலமானார் – கண்ணீரில் தமிழகம்!!

0

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகரான விவேக் இன்று அதிகாலை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது அவருக்கு தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

சின்ன கலைவாணர் விவேக்:

தமிழ் சினிமாவில் யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும் பல சமூக கருத்துக்களை உள்ளடக்கியும் நகைச்சுவை செய்து வந்தவர் தான் விவேக். இதன் காரணத்தினாலே இவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டமும் கிடைத்தது. இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொடக்க காலத்தில் இருந்தே தனது நகைச்சுவை அனைத்திலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் சமூக கருத்துக்களை கூறி வந்த காரணத்தினாலே அதிக அளவிலான ரசிகர்கள் மூலம் கவரப்பட்டார் விவேக்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் சினிமா துறையில் மட்டும் கலக்கியவர் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் பல செயல்களை செய்து கலக்கியவர். மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் காலம் அவர்களை முன்னோடியாக கொண்டு இதுவரை இவர் சுமார் 2.45மில்லியன் மரக்கன்றுகளை நட்டுள்ளார். பல இளைஞர்கள் இவரை முன்னோடியாக கொண்டு பல சமூக நலன் செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விவேக் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நேற்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு நடிகர் விவேக் காலமானார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்த செய்தி தமிழகத்தையே உலுக்கியது. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞர் தற்போது தமிழக மக்களிடம் நீங்கா சோகத்தை ஏற்படுத்தி சென்று விட்டார். இவருக்கு வெறும் 59 வயதே ஆகிறது. இந்நிலையில் அவர் உயிரிழந்தது தமிழகத்திற்கு பெரும் இழப்பு. மேலும் தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகர் மற்றும் மாமனிதரை இழந்து தவிக்கிறது. தற்போது இவரது மறைவிற்கு தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here